சுதா என்கிற சுதாகர்

நான்.சுதா என்கிற.சுதாகர் தாய் தந்தையரின் இரண்டுவருட வேண்டுதலுக்கு வரமாய் பிறந்தேன். சிவகங்கையில்

நான் பிறந்த அடுத்த இரண்டுவருடங்களில் வருடத்திற்கு ஒன்றென அழகான இரு தங்கைகளும் பிறந்தனர். சிறுவயதில் தாய் தந்தையரில் கிடைக்கும் எல்லையில்லா அன்பில் வளர்ந்தேன். எது வாங்கினாலும் எனக்கே முன்னுரிமை என்றானது என் வீட்டில்

காலங்கள் கடந்தோட பள்ளிப்பருவம் அடைந்தேன் நன்றாக படிக்கவும் செய்தேன்
அதனால் இன்னும் அதிக பாசம் பொழிந்தனர்.
நான் வளர்ந்தேன் என் உடல் நிலையில் ஏதோ மாற்றம் என் மனநிலையிலும் ஏதோ மாற்றம் வரக்கண்டேன். தாய் தந்தையருக்கு என் நடத்தைகளால் சோகம் மூண்டது. பள்ளித்தோழர்களின் மனம் கிள்ளிப் பேச்சுகளும் ஊராரின் கேடான.பார்வையும் நெருப்பாக சுட்டது சூடாக

பள்ளிக்கூடம் இடைவெளி தொடர்ந்தேன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார் என் தந்தை.
விந்தையான மாற்றங்களை எடுத்துச்சொன்னார் மருத்துவரிடம், மருத்துவரும் சில பரிசோதனை செய்து விட்டு எனக்கு இரண்டாம் பெயரிட்டார்
திருநங்கை என்று.

மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்தோம். அம்மாவிடம் எல்லாம் ஒப்பித்தார் அப்பா. என் நிலைகண்டு கதறி அழுதாள் என் அம்மா. சில நாட்கள் என் வீட்டில் மரணஅமைதி காரணம் நான். என் எனக்கு மட்டும் இப்படி ஒரு நிலையென்று கதறி அழுதேன்
அம்மாவுடன் தினமும் கோவில் செல்லும் நானோ, இப்போது தெய்வமே இல்லையென்றேன்.
இரவு உறக்கம் இறந்து நாட்கள் பல ஓடின. உறக்கமில்லாது வீட்டில் எல்லையை பலமுறை.அளந்தேன் பாதங்களில்.

ஒரு நாள் இரவு அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஏதோ வாக்குவாதம் நடந்தது. அவர்களின் அறையின் அருகாமையில் சென்று மறைந்திருந்து கவனித்தேன்.

அப்பா கடிந்த குரலில் இன்னும் இரண்டு பெண்பிள்ளைகள் இருக்கு அவர்களோட வாழ்க்கை நாமே கவனிச்சே ஆகணும்.அவர்களுக்கு நல்ல மாப்பிள்ளைகள் கிடைக்கணும்.அதனால சுதாகர் எங்கேயாவது திருநங்கைககளின் கூட்டத்தில் விட்டுடலாம். தேவைபடும் போது போய் பார்த்துக்கலாம் என்றார். அம்மா முடியாது என்றாள் அப்பாவிடம்
சரி நான் எங்கேயாவது போயிடுறேன்.நீயே பாரு என்றார் கடும்கோபத்துடன் சற்று நேரத்தில் அமைதியானாள் அம்மா.
நான் ஒரு பாரம் ஆனேன். தற்கொலை செய்து உயிர் விட துணிந்தேன். எந்த உயிரையும் இது வரை கொல்லாத எனக்கு என்னுயிரை மாய்ப்பதிலும் ஏனோ பயம். படைத்தவனே பறிக்கட்டும் என்று நினைத்து வீட்டைவிட்டு போய்விட முடிவெடுத்தேன்.

மறுநாள் வீட்டிற்கு ஒரு ஜோதிடர் வந்தார். வீட்டின் நிலைகுறித்து கேட்டறிந்தாள் அம்மா.
ஜோதிடரோ கங்கைக்கு போய் வாருங்கள் என்று கூறி விடைபெற்றார்

அப்பாவுக்கும் அடுத்த இரண்டுநாட்கள் விடுமுறைவர கங்கைக்கு பயணம் அங்கேயே என்னை தலைமுழுக முடிவெடுத்தார் அப்பா.
எல்லாம் நான் அறிந்திருந்தேன் ஆனால் என்னில் அவர் யாரும் இதனை பேசியதில்லை

பயணத்திற்கான நாள் வீட்டின் முன்னில் கார் வந்து நின்றது. வீட்டிலிருந்து இறங்கும் போதே மனதால் மரித்துவிட்டேன். மரித்தஉடலைக்கொண்டு காரில் சென்றனர் கங்கையில் விட்டுவிட்டு தலைமுழுக. பயணம் முழுக்க என்முன்னே கண்ணீருடன் அம்மா. ஒன்றுமே அறியாத என் தங்கைககளும் அருகில் நீண்டதூர பயணத்துக்கு பின் கங்கையை அடைந்தோம். நல்ல நெரிசலான இடத்தினில் வேண்டுமென்றே தொலைத்தேன், என் குடும்பத்தினை

அழுகை மட்டுமே ஆறுதலாய் ஆனேன். நேரம் செல்ல செல்ல பசி வந்து வாட்டியது. கை ஏந்தவும் மனமில்லை எனக்கு அது பழக்கமும் இல்லை.
தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தேன். என்னைப் போன்ற சிலர் வருவதை கண்டேன். பசியினை சொன்னேன். பசிக்கு உணவளித்து தங்கவும் தஞ்சமளித்தது என் போன்ற உறவுகள்.

பின்பு பசிபோக்க நடக்கலானேன். ரயில் நிலையம் பேருந்து நிலையமென. ஆண் என்ற பெயரில் சில அரக்கர்களை கண்டேன். பெண் என்ற பெயரில் சில விற்பனையாளர்களை கண்டேன். நல்லவனைப் போன்ற கொடியவனை கண்டேன். மாளிகைவீட்டு சேரிகளை கண்டேன். குடிசை வீட்டு மனிதனையும் கண்டேன். உலகமெதுவென கற்றிட துவங்கினேன்

என்ன இந்த வாழ்க்கை என்று புலம்பினேன்
ஓர் நாள் காலை பேருந்து நிலையம் போகும் வழியில் அதிகம் ஆட்களில்லாத தெருவின் குப்பைத்தொட்டியிலிருந்து ஓர் பச்சிளம் குழந்தையின் அழுகை. அழுது அழுது குரலில் போலும் வலுவிளந்த குழந்தை. கண்டதும் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது. அள்ளி எடுத்து மார்போடு அணைத்தேன். அழுது பசித்த குழந்தை பாலுக்காக என்மார்பில் தேடியது.

ஒன்றும் செய்ய முடியாத என் நிலையறிந்து கண்ணீர் வடிந்தது. என் கண்ணீர் அக்குழந்தையின் வாயில் விழ அதனைப் பருகியது குழந்தை.
என் தண்ணீர் பாட்டிலிருந்து சிறுது புகட்டினேன்.

ஆணின் சிறப்பால் நீ உயிரானாய்
அதனை உன் தந்தை உணரவில்லை
பெண்ணில் சிறப்பால் நீ பிறந்தாய் அதனை உன் தாயும் உணரவில்லை.

அவ்விரண்டும் அறிந்திருந்தும் இறைவன் எனக்கு அவ்விரண்டுமே தரவில்லை. என்று எனக்கு நானே புலம்பிக்கொண்டேன்.
காலை விடிந்ததும் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தேன். அதன் நல்ல எதிர்காலம் கருதி.

ஆண்களே உங்களுக்கென்று இறைவன் தந்த சிறப்பை மதித்து பேணுங்கள்
பெண்களே உங்களுக்கென்று இறைவன் தந்த மாபெரும் சிறப்பை மதித்து பேணுங்கள்.

இப்படிக்கு
சுதா என்கிற சுதாகர்.

எழுதியவர் : malikmohamed.malik (14-Jun-15, 10:54 am)
பார்வை : 237

மேலே