அன்பின் வழியதே உயிர்நிலை

சில்லென நீர்பட்டது -மலர்
சிலிர்த்தது போல்தலை யாட்டும்!
மெல்லவோர் குழந்தைமுகம் -எங்கண்
முன்வந் தே தலை நீட்டும்!
சொல்லெனத் தமிழ்வந்து நாவில்
சுந்தரப் பாட்டொன்று கூட்டும்!
பல்மறைத் தவள்வந்த போது
பல்சுவை என் மனம்தா லாட்டும்!
======
பாரெங்கும் நடந்த பாதகங்கள் தம்மைப்
பாடி எதிர்த்ததமிழ் இனமே!
ஊரெங்கும் அழிந்தின்றோ உலகமது சிறுத்தபடி
உலகமய மாவதெவ் வினமோ?
சீர்பொங்கி எழுகின்ற சிந்தனை யால்பொருள்
சேர்க்கின்ற இனங்களோ வாழ்ந்திடும்?
நீர்பொங்கு கண்களில் நிதமுதவும் கைகளில்
நிலைனிற்கும் அன்புதான் வாழ்ந்திடும்!
========== =======

எழுதியவர் : (14-Jun-15, 2:41 pm)
பார்வை : 132

மேலே