தந்தையும் தாய்தான்
நிலவு சோறூட்டி
நிழலாய் வழிகாட்டி
அன்பால் மெருகேற்றி
அன்னையவள் சிறக்கின்றால் .........
அறிவு பலகூட்டி
அக்கறை கரம்பற்றி
அனுபவ சபையேற்றி
ஆள்கிறான் தந்தையவன் .......
தவழும் நாள் முதலே
வளரும் லட்சியத்தில்
பெரும்பங்கு என்தந்தை
பெற்றுள்ளார் உண்மையிலே ........
தோலில் சுமந்தவரோ
தொலைதூரம் கடந்துள்ளார்
எட்டாத எத்தனையோ
இலக்குகளை எட்டவைத்தார் .........
கண்ணுறங்க நேரமில்லா
கடும் உழைப்பு கொண்டிருந்தார்
என் கனவெல்லாம் நனவாக்க
காலமெல்லாம் உழைபெடுத்தார் ...........
தோல்தந்த தோழமைக்கு
தோழருண்டு பலரிங்கே
தோள்மீது சுமக்கின்ற
தோழனென்றால் தந்தை மட்டும் ........
மீண்டுமது கிடைக்காத
இடமதுவெ அன்னை மடி
மீலாத சுகம் தருமே
மெத்தை அது தந்தை மடி ......
லட்சியத்தின் உச்சி தொட்டு
உயர்த்த நிலை போக
உயிரதனை துச்சமாய்
உளமார நினத்தவரே ..........
உயிராக நினைத்துதான்
உண்மையாய் வாழ்வேனே
உனக்காக செருப்பாக
உயிர்வரை தேய்வேனே ...............