நல்ல முட்டை -ரகு
நானொரு
நல்ல முட்டையாகி
என்னில் சிறிய
துளையிட்டுக் கொண்டு
இந்த உலகை
உற்று நோக்குகிறேன்
சற்றே என்னை
வழித்துவிடாமலும்
மேகத்திரட்சி
படுகிறது முதலில்
மழைத்துளி உயிர்த்து
வரும் தருணமென
விழிகள் பனிக்கிறதென்
காத்திருப்பு
திரண்டவைகள்
ஒன்றையொன்று முந்தி
முன்னேற விழைய
முடிவில் மனித உருக்கொண்டு
ஓரங்கட்டுகட்டுகின்றன
மழையற்று
வெளுத்துவிடுகிறது
வான்
புரோட்டா மணம்
காற்றில் பரவ
நான் சுதாரிக்கும் முன்
என்னையுடைத்து
சுடுகல்லில் இட்டபோது
புரிந்ததெல்லாம்
நல்லதுக்குக் காலமில்லை !