ஒரு மந்தியின் வாக்குமூலம் -சந்தோஷ்
![](https://eluthu.com/images/loading.gif)
ஒரு மந்தியின் வாக்குமூலம்
——————————————–
ஓ ! மனிதர்களே !
பூமித்தாய் கருவறை ஆழம்வரையிலுமா
ஆழ்துளையிட்டு உயிர்நீரை உறிஞ்சிவிடவேண்டும்?
மேகத்தாயின் கருவறையிலும்
ஈரக்கரு சிதைக்கப்பட்டதுவாம்.
என்ன செய்யப் போகிறீர்கள் ?
மரங்களை கொன்ற பாவத்திற்கு
தலைமூழ்கி பரிகாரம் தேட
கூவத்திலும் புனிதச்சாக்கடை ஓடாதே?
என்ன செய்யப் போகிறீர்கள்?
நாளை தலைமுறைக்கு
ஒன்று செய்வீர்களா?
உங்கள் உமிழ்நீரை ஊற்றியவாது
ஒரு மரக்கன்றையேனும் வளர்த்துவிடுவீர்களா?
ஓ ! உலக கவிஞர்களே !
கொஞ்சம் அவசரமாய்
உங்கள் பேனாவின் முனையை
மரித்துப்போகும் மரங்களுக்கு
முட்டுக்கொடுப்பீர்களா ?
உங்கள் பேனாவின் மையினால்
மரத்துப்போன மானிடர்களின்
முகத்திலாவது
விழிப்புணர்ச்சியினை தெளிப்பீர்களா?
இதோ…!
உங்கள் மீதுதான் குற்றஞ்சாட்டி
ஒரு மரண வாக்குமூலம் பதிவிட்டவாறே
உலகின் கடைசி நீர்த்துளியினை
உறிந்து கொண்டிருக்கிறேன்.
—
**திரு. ஜபீஷ் எடுத்த இந்தப் படத்திற்காக வல்லமை மின் இதழில் படக்கவிதை போட்டி ஒன்று நடந்தது அதில் மேற்கண்ட எனது கவிதை பாராட்டுதற்குரிய கவிதையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. தேர்ந்தெடுத்த போட்டியின் நடுவர் திருமிகு. மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கும் வல்லமை மின் இதழுக்கும் என் நன்றி .
-இரா.சந்தோஷ் குமார்