வேதியல் விந்தை-போட்டி கவிதை

நீரினில் மூழ்கி இறந்திருப்பேன் இறந்தும்
ஊரினில் பிறந்திருப்பேன் இருந்தும் திறிந்திருப்பேன்
பாரினில் உயிர்கள் வாழ்ந்திடவே எனையழிப்பேன்
பேரினில் முதன்மைபெற்ற ஆக்சிஜன் நானே!

வேதியல் மாற்றத்தின் வேந்தனானே வெந்திடும்
சோதியில் சிரிப்பதும் ஜோதியாய் ஜொலிப்பதும்
சாதியில் கொதிப்பதும் பாதியில் முடிப்பதும்
பௌதியில் பாடமானேன் பாவிகளால் பாடையானேன்!

ஓருடல் ஜோதியாவேன் வேறுடல் போதியாவேன்
நீருடன் சேர்ந்தால் அனைத்திடுவேன் தீயையும்
ஈருடல் சேரும்போது உயர்வான உயிராவேன்
சீருடன் வாழயாவரும் சுவாசத்தை போற்றிடுவோம்!!

எழுதியவர் : கனகரத்தினம் (15-Jun-15, 11:41 pm)
சேர்த்தது : கனகரத்தினம்
பார்வை : 83

மேலே