2016ல் நாங்க ஜெயிச்சா

என்னய்யா 2016 பொதுத் தேர்தலுக்கு எவ்வளவோ நாள் கெடக்கது அதுக்குள்ள உங்க கட்சி தேர்தல் அறிக்கையை அடுத்த வாரம் வெளியிடப் போகுதாமே.

ஆமாய்யா. எங்க கட்சியின் முக்கியக் குறிக்கோளே கல்வித் தரத்தை உயர்த்தறது தான்.

சரி அதுக்கு என்ன செய்யப் போறீங்க?


நாங்க அடுத்த வருஷம் நடக்க இருக்கும் தேர்தல்ல ஜெயிச்சா
தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எல்லாப் பாடத்திலேயும் முழு மதிப்பெண்கள வழங்கிடுவோம். 10, 12 வகுப்புத் தேர்வு எழுதற எல்லாருக்கும் முறையே 500/500, 1200/1200 தந்திடுவோம்.

இதில்லென்ன லாபம்?

யோவ் என்னய்யா இதுகூட்த் தெரியாம கேள்வி கேக்கற? தேர்ச்சி விகிதம் 100க்கு 100 ஆகும். கல்வித் தரமும் உயரும்.

உம். அப்பிடி போடு. ஒரே கல்லுலெ ரெண்டு மாங்காயை அடிக்கப்போறீங்க. சபாஷ். வாழ்க.

எழுதியவர் : மலர் (16-Jun-15, 9:09 am)
பார்வை : 227

சிறந்த நகைச்சுவைகள்

மேலே