மீளா விசை

சொப்பனத்தில் வாராத துன்பமெல்லாம் வந்தது நேரே
சொந்தபந்தமெல்லா உதவாப்பயலென
சூடிட்டு செல்லுகையில்.

தெரியாமல் செய்த பிழை
சுயநலத் தால் ரூபம் எடுக்கும்;
நீருள்ளே தலையமுக்கி திணருவது போலொரு
தவிப்பினைத் தரும்;

கஷ்டப்பட்டு உழைத்த கதை
மறந்து போகும் -
செய்த தப்பை சொல்லி நுனிப் பேச்சாலே குத்திப் போகும்;
ஆணுக்கும் பெண்ணுக்கும்
சமமாயெல்லாம் வேண்டு மென்பார்,
சம்மந்தமில்லா செய்தி
கொண்டு ஆண்குலம் இழிப்பார் !

சகிப்புத்தன்மை
அற்று
குறைதேடும் கூட்டமிது,
எனக்கென்ன வென -
மனம் மீள,
ஒரு புள்ளியில் குடும்பம் பற்றி
சுற்றும் மையநோக்கு விசை மட்டும்
விலக வில்லை...

புலம்பும் மனம்
புழுங்கி
கொள்கையில்
என் கால்தட்டி விழுந்த
குழந்தை
தன் தவறே என்ற
மாதிரி எழுந்து சிரிக்கையில்
மீண்டு வந்தது
என் மனம் மீளா விசை ...

எழுதியவர் : சுந்தர பாண்டி (16-Jun-15, 3:11 pm)
Tanglish : meelaa vijai
பார்வை : 82

மேலே