அவமானங்களைத் திற

காறி உமிழ்ந்த
எச்சில் துடைத்ததில்
துவங்கியது என் முதல் முயற்சி..
********
துரோகத்தின் பக்கங்கள் எதெற்கு?
முன்னுரை போதுமே
எனக்கு.
********
செத்துவிடலாம் போலெனச்
சொல்லும் மனசை
வாழ்ந்துவிடலாம் போலெனெப்
பழக்க வேண்டும்.
********
வெறும்
வண்ணத்துப் பூச்சிகள் தான் கிடைத்தது
வண்ணங்கள் நான் சேர்த்தது.
********
அவமானங்களைத்
திறந்துதான் வந்தேன்
இச் சிகரத்திற்கு.
********