என்னவள்

என்னவள்
இவள் என்னவள்
என்னுயிர் ஆனவள்
காதலின் அர்த்தத்தை
கண்ணிலே சொன்னவள்...
என்னுடல் என்னுயிர்
இரண்டிலும் நீதான்
இரண்டில் ஒன்றை
இன்று இழந்து விட்டேன்...
மண்ணிலே விழுந்த
மழைத்துளி போல
உனக்குள் இன்றே
நான் இறங்கி விட்டேன்...
உன் ஒரு நொடி என்னுடன் நீள்வதற்கு
என் ஆயுளை நிறுத்தி வைப்பேன்...
என் இரவில் இல்லை கருமை
உன் பிரிவால் நான் முற்றும் தனிமை
உன்னுடன் சேர இல்லை ஓர் வழியா
காலம் தான் தந்த பரிசு தான் வலியா
உன் துயரம் எல்லாம் என்னுடனே
இன்று விட்டுன்னை விலகட்டுமே.....