உறவு ஒன்று உயில் எழுதுகிறது - 5

நன்றி சொல்லி சொல்லி
நா வறண்டு போனவளே
உன் வார்த்தைகளும் செயல்களுமே
என் மீதான உன் அன்பை ]
எனக்கு சொல்லுமே அன்றி
வேறு ஒன்றும் இல்லை.

என்னை பிரிந்ததில் அவசரப் பட்டு விட்டாய் என
நீ நிதானமாய் புரிந்து கொள்வாய்.
என்னை புரிந்துகொண்டது
நீ மட்டும்தானென்று நீ சொல்லமாட்டாய் .....
நீ நினைக்கின்ற நாள் நிச்சயம் வரும்.

தவறுகள் தண்டிக்கப் பட்ட பின்னும்
மன்னிப்புகள் மறுக்கப்படும்உன் தேசத்தில்
மண்டியிட்டு அழுவதற்கு மனமில்லை எனக்கு

என்னை பிரிந்ததற்கு வருந்தவேண்டிய
நீயே வாய் விட்டு சிரிக்கும்போது
நானெதற்கு நடுக் கூடத்தில் நின்று அழ வேண்டும்
வருத்தம் தரும் உன் நினைவை
வாறி இறைத்துவிட்டு இன்னுமொருமுறை
இந்த உலகை வலம் வர புறப் பட்டு விட்டேன்

எழுதியவர் : parkavi (16-Jun-15, 5:17 pm)
சேர்த்தது : பார்கவி partheeban
பார்வை : 73

மேலே