யாருக்காக
சமூகமாற்றத்திற்க்கா..
இலக்கிய சேவைக்கா..
எதற்காக..
கவிதை என்று
எழுதிக் குவிக்கிறாய்..
என்றது..
என் கவிதைகளில் ஒன்று..
இருப்பதிலேயே..
குள்ளமானது..அது..
ஹைக்கூ ..
அதன் பெயர்..
அதற்கு புரிகிற மாதிரி
பதில் சொன்னேன்..
"எழுதுவது ..
நான் ..
படிப்பது
நீதானே!"
..
என்னுடைய ..
மற்றக் கவிதைகள்
நடுவே ஒரே அரட்டை..
சிரிப்பு சத்தம்!
அதிலிருந்து..
"தலைவா.."
என்று கேலியாக
ஒரு குரல்!