அரசாங்கத்திற்கு ஒரு கேள்வி

மாணவன் எனக்கு
இலவசமாய் சத்துணவு,
நோட்டுப்புத்தகம்!

பதினொன்றாம் வகுப்புப் பயிலும்
அண்ணாவிற்கு
இலவசமாய் மிதிவண்டி,
மடிக்கணிணி!

அக்காவின் திருமணத்திற்கு
இலவசமாய்த் தாலிக்குத் தங்கம்!

இத்தனை இலவசங்கள்
தருவதற்கு வேண்டுமோ?
உத்தம அரசிற்கு
மது விற்ற வருமானம்!
புத்தியுள்ள அரசென்றால்
புரியாமல் போகுமோ ?
இது கண்கள் விற்று சித்திரம்
வாங்கும் அடி முட்டாள்தனம்?

எழுதியவர் : (23-Jun-15, 8:07 pm)
பார்வை : 86

மேலே