இன்பக் குறிப்பு

கொடும்பை குளித்தக் கொடிச்சி குளிர்ந்த
கொடுங்காய் பிளந்த நகைப்பு –உடும்புப்
பிடிதளர்த்தி உள்ளம் பிசைந்தெடுத்துக் காதல்
கொடிநாட்டு மின்பக் குறிப்பு.
கொடும்பை –நீர் அருவி
கொடிச்சி –குறிஞ்சி நிலப்பெண்
கொடுங்காய் –வெள்ளரி
*மெய்யன் நடராஜ்