பொழுதுபோகல அதான்

தூர்தர்சனின்
வெள்ளிகிழமை ஒளியும் ஒலியும்
சனிக்கிழமை பிராந்திய படம்
ஞாயிறு மதிய சக்திமான்
மஹாபாரதம்
ஜெய் ஹனுமான்
சந்திரகாந்தா

அகில இந்திய வானொலியின்
வசந்த அழைப்பு
தேன் கிண்ணம்
தென்கச்சி கோவின்
இந்த நாள் இனிய நாள்
இதம் தரும்
இளையராஜா பாடல்கள்
இவையனைத்தும்

எனக்கும் போலவே
என் பால்யத்தில்
அவைகளுக்கும் உயிரென
நான் உங்களுக்கு
சொல்லிக்கொண்டிருப்பதை
போலவே

எங்கள் வீட்டு பழைய
பிபிஎல் டிவியும்
பிலிப்ஸ் ரேடியோவும்
அவைகளுக்குள்
சொல்லிக்கொண்டிருக்கலாம்
எங்கள் வீட்டு பரணில்
இவையெல்லாம் அவனுக்கும்
உயிரென.

எழுதியவர் : தர்மராஜ் (25-Jun-15, 9:11 pm)
பார்வை : 1295

மேலே