சின்னப் பையன்

டீச்சர் நான் கிராமத்துப் பையன்.

அது எனக்குத் தெரியும் சின்னப் பையன். உனக்கு என்ன பிரச்சனை?

இல்லைங்க டீச்சர் எங்கூடப் படிக்கறவங்கெல்லாம் எம்பேரக் கிண்டல் பண்ணறாங்க.

ஆமாண்டா சின்னப் பையா நாடே சினிமா ரசனையிலே கெட்டுக் கெடக்குது. நல்ல தமிழ்ப் பேரா இருந்தா யாரும் மதிக்கமாட்டாங்க. சரி உனக்கு ஏன் அந்தப் பேர வச்சாங்க.

அது எங்க தாத்தாவின் நினைவா இருக்கட்டுமேன்னு வச்சாங்க.

சரி உனக்கு ஒரு இந்திப் பேரா நான் வைக்கட்டுமா?

ஐயோ டீச்சர் எங்க தாத்தாவை அவமதிச்ச மாதிரி ஆகிடுமே.

சரி உங்க தாத்தா பேரையே இந்திலே மாத்தி வைக்கவா?

சரீங்க டீச்சர்.

சரி இன்னைய்லே இருந்து உன் பேரு சோட்டா பச்சா. அமிதாப் பச்சான் தங்கர்பச்சான் மாதிரி நீ பெரிய ஆளா வருவ. வாழ்த்துக்கள் சோட்டா பச்சா.



----------

சிரிக்க அல்ல.

எழுதியவர் : மலர் (26-Jun-15, 4:29 pm)
Tanglish : chinnap paiyan
பார்வை : 263

மேலே