உயிரின் உயர் உறவுகள் - தேன்மொழியன்

உயிரின் உயர் உறவுகள் - பாரதிக்கு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஊனாங்க் கொடியை
உடல் முழுக்க சுற்றியவள்
தொடர்வண்டி பயணமென
தடம் முழுக்க ஓடுகிறாள் ..
தக்காளிப் பழங்களை
கை நிறையப் பறித்தவள்
விளையாட்டு சமையலுக்கும்
பெரிய தீப்பெட்டி தேடுகிறாள்
நெல்லு கட்டின் முடிச்சை
பல்லில் கடித்து இழுத்தவள் ..
படமெடுக்கும் பாம்பென
பெரண்டைச் செடியை மிதிக்கிறாள்..
கொலைகார கொக்கு ..என
கோபத்தில் திட்டியவள்
பானை நீரில் வளர்க்க
ஏரி மீனை எடுக்கிறாள் ...
பத்து வயது இளையவள்
எனை "வாடா" என்றே அழைப்பவள்..
முத்து மொழியின் முகமென
தத்தி தாவி விழுகிறாள்....
- தேன்மொழியன்
தங்கை ...பாரதிக்கான பக்கங்கள் ...