இமை சைகையித்தல்

என் இதயத்திற்கு ஏனடி
இமைப்பது போல
சவுக்கடி கொடுத்துவிட்டுபோகிறாய் ....
அமைதியல் நினைவை
அமிலத்தைகொண்டு
சமைத்துவிட்டுபோகிறாய் ..
அடிக்கடி கனவில் அரக்கியமுகத்தால்
அரைந்துவிட்டுபோகிறாய் ..
காதல் சொல்லவரும் என்னை
கருத்துவேறுபாடு செய்து
காதலின் கெளரவவிலகல் செய்கிறாய் ..
காந்தவியல் அற்று நிற்கிற உன் இதயம்
பூமிக்கு[ புவிஈர்ப்புவிசை ] புவிஎதிப்புவிசை எய்
கற்றுத்தர போகிறது ...
இதயமாற்று வைத்தியர்கள் இல்லாத காலமாய்
என் பொழுது தனிமை வேதனையில் கழிகிறது .....

எழுதியவர் : (27-Jun-15, 6:48 am)
பார்வை : 61

மேலே