என் காதல் உன்னோடு
"ஆயம்மா ஆயம்மா ஏன் அழுகிறீங்க .?" அந்த பிஞ்சி கரங்கள் கண்ணீரை துடைத்து விட்டு கேட்டபோது ஆறுதலாய் உணர்ந்தாள் கமலா..
"ஒன்னும் இல்லை பாப்பா கண்ணுல தூசி விழுந்திடுச்சி ..."
"நீங்க பொய் சொல்லுறீங்க .உங்களுக்கு எங்க அம்மா திட்டினாங்க தானே .?"
"அதெல்லாம் ஒன்னும் இல்லை... அவங்க எதுக்குமா என்னை திட்டுறாங்க... இப்ப பாப்பா சாப்பிடுங்க.... ஓடி வாங்க ஓடி வாங்க....". மன வேதனையை குழந்தையிடம் காட்டாமல் மறைத்தாள்.
கமலா .
வயதானவள் அல்ல. வெறும் இருபத்தி எட்டு வயது தான். சிறு வயதிலேயே தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்தாள்.
குழந்தை பருவமோ குமரி பருவமோ இரண்டுமே நரக பருவம் தான் கமலாவிற்கு. காரணம் தந்தை இறக்கும் போது அம்மா இளமையாக இருந்தார். அதனால் இன்னொருவருக்கு இரண்டாம் தாரம் ஆனாள் .
படிப்பை மறந்தும் கூட கமலாவிற்கு காட்டவில்லை . வீடு வீடாக வேலைக்கு அனுப்ப தொடங்கினார்கள் .பத்து வயதிலேயே பத்துப் பாத்திரம் தேய்த்தாள் கமலா .
வீட்டு வேலைக்கு சென்ற இடத்தில தான் பார்த்தாள் அவனை.
ம்ம்ம்ம்..... பதினெட்டு வயதில் அவளுக்கும் காதல் முளைவிட்டது .
பணக்காரன் தான் ஆனாலும் பாசக்காரன். கமலாவிற்கு கண்களால் காதல் தூது விட்டான். கருணை நிறைந்த அவன் காதல் அந்த நேரத்தில் அவளுக்கு தேவைப்பட்டது.
வீட்டில் யாருமற்ற நேரம் பார்த்து அவனே கேட்டான் . "கமலா நீ என்னை கல்யாணம் பண்ணுறியா .?"
"என்ன .!!" ஆச்சிரியத்துடன் பார்த்தாள்.
"நெசமா தான் கேட்கிறேன் .நீ அழகா தான் இருக்கிற .ஆனா அழுக்காக டிரஸ் போடுற . அவ்ளோ தான் ".
இவன் விளையாடுறான் என்று நினைத்து சிரித்தாள் .
"சிரிக்காத கமலா சீரியஸ் சொல்லு .நாங்க கல்யாணம் கட்டிகிருவமா .?" ஆங்கிலம் கலந்த அவன் தமிழ் அழகாய் இருந்தது அவளுக்கு .
"இது ஐயா அம்மாவுக்கு தெரிஞ்சா என்னை கொன்னு போடுவாங்க சின்ன ஐயா " அவள் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே வாசலில் கார் சத்தம் கேட்டது . "அம்மா வந்திட்டாங்க .கமலா நீ யோசிச்சி முடிவு சொல்லு சரியா " அவன் மாடிக்கு ஓடி விட்டான்.
சின்ன ஐயா அருண் தொழிலதிபர் திலகாவின் இரெண்டாவது மகன் .மூத்தவள் சுபா .அவள் வெளிநாட்டில் உயர்படிப்பு படித்துகொண்டு இருந்தாள். பெரிய ஐயா விட்டுட்டு போய்டதா பேசிகிறாங்க. அம்மாவும் மகளும் ஒரே மாதிரி ஆணவம் பிடிச்சவங்க. அம்மா பரவால. சுபா திமிரின் மொத்த உருவம் . கமலா பதினைந்து வயசுல இருந்து இங்க தான் வேலை. அம்மா அப்பப்போ வந்து முதலாளி அம்மாகிட்ட பணம் வாங்கி போவாங்க .
அன்று வீட்டு வேலை எல்லாம் முடிச்சிட்டு உறங்க போனவளுக்கு மனசெல்லாம் சின்ன ஐயாவின் நினைவு தான் . பொழுது விடிந்தது தெரியாமல் இரவெல்லாம் கற்பனை .
"கமலா" முதலாளி அம்மாவின் குரல் கேட்டு தான் எழுந்தாள்
"அம்மா மன்னிச்சிருங்க அம்மா ."
"சரி சரி போய் சின்ன ஐயாக்கு காபி குடு"
மனசுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது கமலாவிற்கு .
"சின்ன ஐயா... சின்ன ஐயா... காபி...."
"கொண்டு வா கமலா .. "
அவன் முகம் பார்த்ததும் நானிக்கொண்டாள் .
"ஹா ஹா வெட்கத்திலும் அழகா இருக்க கமலா ."
" சும்மா போங்க சின்ன ஐயா .. "சிணுங்கிக்கொண்டு அவ்விடம் விட்டு அகன்றாள்
காலம் கரைந்து கொண்டிருந்தது. காதலும் வளர்ந்தது.
ஒரு நாள் முதலாளி அம்மா வெளிநாடு செல்ல தயாரானார். சுபாவுக்கு படிப்பு முடிவதால் அவரையும் கூட்டிட்டு வர போவதாக கூறினார். சின்ன ஐயா போகவில்லை படிப்பு கடைசி வருடம் என்பதால்.
அம்ம கிளம்பி போயி விட்டார்கள். அவர்கள் இப்படி போவதற்கு கமலா மேல் உள்ள நம்பிக்கையும் காரணமாகியது.
கமலா உற்சாகத்தில் துள்ளி குதித்தாள். அம்மா வரும்வரை சின்ன ஐயாவை நானே கவனிக்கலாம் என்று. அதுதான் நடந்தது.
பேசிக்கொண்டார்கள். சிரித்துக் கொண்டார்கள். நெருக்கமானார்கள். தப்பும் செய்தார்கள். முதலில் மறுத்தாலும் பின் கமலாவும் விரும்பினாள். திலகா திரும்பி வரும் வரை இருவரும் இஷ்டம் போல் வாழ்ந்தார்கள்.
திலகா வந்ததுமே சுபாவிற்கான திருமண ஏற்பாடுகள். நடந்தது. காரணம் அவள் அங்கு காதல் வயப்பட்டுவிட்டாளாம்.
"காதலாம் காதல்" முதலாளி அம்மா திட்டிக்கொண்டிருந்தது காதில் விழுந்ததும் தூக்கி வாரிப் போட்டது கமலவிற்கு.
ஓ... சுபாவிற்கு என்று தெரிந்ததும் பெருமூச்சு விட்டாள்.
சின்ன ஐயா மாறவில்லை. மாறாக அதிகமாக நேசிக்க தொடங்கினார்.
"கமலா உன்னை கல்யாணம் பண்ணிக்குவேன். நீ கவலைப் படாதை" பேச முடிந்த தருணத்தில் எல்லாம் சின்ன ஐயாவின் பேச்சு இதுவாகவே இருந்தது.
எப்பிடியோ சுபாவுக்கு திருமணம் முடிந்தது. சுபா அம்மா, கணவர் மற்றும் சின்ன ஐயா திருமணம் முடிந்து வீடு வந்துகொண்டிருந்த போது தான் அந்த கோர விபத்து நடந்தது.
லொறி ஒன்று காருடன் மோதியதில் சுபா உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தாள். கணவருக்கும் பலத்த காயங்கள்.
ஆனால் சின்ன ஐயா......
ஆம்ம்ம்...... சின்ன ஐயா இந்த உலகத்தை விட்டு சென்று இருந்தார்.
செய்தி அறிந்து திலகா அம்மா கதறியதை விட கமலா கதறினாள்; துடித்தாள். முதன் முதலாக தன்னை நேசித்தவனை பறித்த இறைவனை சபித்தாள்.
இவை நடந்து கொண்டிருக்கும் போதே தன் உடல் நிலை மாறுவதை உணர்ந்தாள்.
ஆம்
சின்ன ஐயாவின் கருவை வயிற்றில் சுமக்க தொடங்கி இருந்தாள்.
எப்படியாவது குழந்தையை பெற்றெடுக்க முடிவு செய்தாள் .
அதற்கு முதலில் இங்கு இருந்து செல்ல வேண்டும்.
எங்கே செல்வது.... அம்மாவிடம் செல்ல முடியாது. அவர் எப்படியும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் .நடப்பது நடக்கட்டும் கால் போன போக்கில் நடக்க தொடங்கினாள் .
கிடைத்த பஸ் ஒன்றில் ஏறி முடிவு தூரம் என்று டிக்கெட் எடுத்தாள். இருக்கையில் பக்கத்தில் இருந்த முதாட்டி பேச்சுக்கொடுத்தாள்
ம்ம் சொல்லி அழ ஒருவர் கிடைத்த மகிழ்ச்சியில் அனைத்தையும் சொல்லி அழுதாள் .
அந்த வயதானவரின் முகம் மலர்ந்தது .
ஆம் அவரின் மகள் திருமணமாகி பத்து வருடங்கள் ஆகியும் குழந்தை இன்றி இருந்தாள். .இவளை எப்படி சரி தன்னோடு கூட்டிச்செல்ல எண்ணினாள் .
முதாட்டி தன் மகளின் நிலையை கூறினார் .மலடி என்று எல்லோரும் தூற்றுகிறார்கள் உன்னால் மட்டுமே எனக்கு உதவ முடியும் என வேண்டிக்கொண்டாள்.நீ எங்களுடனே இருக்கலாம் குழந்தையை நீயே வளர்க்கலாம் .ஆனால் தாயாக என் மகளே இருக்கட்டும் .உதவி செய் பெண்ணே .உன்னை என்றுமே மறக்க மாட்டேன் என்றாள் மூதாட்டி .
கமலாவிற்கு அது சரி என்று பட்டது .
என்னால சின்ன ஐயாவ போல குழந்தைய வளர்க்க முடியாது .இவங்க சொல்றது போல செய்தால் குழந்தைய ennaal வளர்க்கவும் பக்கத்தில் இருந்து பார்த்துகொள்ளவும் முடியும்.
இறுதியாக முடிவெடுத்தாள்.
மூதட்டியோடு சென்றாள்.
யாருக்கும் தெரியாமல் அவர்கள் வீட்டில் இருந்தாள். மகள் கர்ப்பம் ஆகியதாக முதாட்டி ஊருக்கு சொன்னாள்.
கமலா குழந்தையை பெற்றெடுக்க மூதாட்டியின் மலட்டு மகள் தாயானாள் .
கமலா ஆயாவானள் .
இப்போது கமலாவிற்கு குறை ஒன்றும் இல்லை .
கமலாவை எவரும் தேடவும் இல்லை .
இன்று சின்ன ஐயாவின் இறந்த நாள் .
ஏழு வருடங்கள் கடந்து இருந்தது அதை நினைத்து தான் அழுதுகொண்டிருந்தாள் கமலா .
காதலர்கள் மரிக்கலாம் காதல் மரிப்பது இல்லை .