காதலின் துளிகள் 1

நீ ..உறங்கிக்கொண்டு இருக்கிறாய்.
உனை பார்த்த ஓவியன்..
வரைய துவங்கினான்..
பூவை.

ஒரு மொழியும்..
உன் விழியும் ஒன்றுதான்.!
இரண்டிலும் ஏராளமான.,
வார்தைகள்
செரிந்து கிடக்கின்றன.!

பறவை பார்த்து விமானம் படைக்கப்பட்டது.
உன்னை பார்த்து புல்லாங்குழல் படைக்கப்பட்டது.!

உன்னை விரும்பச்சொல்லி..
எனக்கு கொடுக்கபட்ட பரிசு என் வாழ்நாட்கள்.!

எழுதியவர் : நிலாகண்ணன் (27-Jun-15, 5:53 pm)
Tanglish : kathalin thulikal
பார்வை : 121

மேலே