நாளும் மணநாள்

காற்றோடு பூவும் புன்னகை தூவும்
தூறலில்
நான் நாளும் நனைகின்றேன் .

உன் உயிரோடு என்னை
உன் கண்கள் கோர்க்கும்
தருணங்கள்
நானும் உறைகின்றேன்.

கலை கண்ட கண்கள்
விலை காண்பதில்லை !
நம் காதலில் நாமும்
பிழை காண்பதில்லை !
என்றே நானும் உணர்கின்றேன் .

உன்னாலே என்னுள்
உருவான காதல்
உணர்வல்ல உலகம்
என்றே நானும் காண்கின்றேன்.

கனவோடு கண்கள்
உன் முகம் தேடும்
நினைவோடு நித்தம்
நான் கரைகின்றேன்.

அன்பே நீ அறியாத தாயின்
அறிமுகமாவேன்
உன் தாயும் சேயும் நானாவேன்.

என் அன்பான கள்வா !
உன் அன்பாலே என்னை
இழந்தவள் நானும்
நாம் மறுஜென்மம் காணும்
மணநாளை எண்ணி
நாளும் வாழ்கின்றேன் .

எழுதியவர் : கேசவன் புருசோத்தமன் (27-Jun-15, 7:44 pm)
Tanglish : naalum mananaal
பார்வை : 724

மேலே