வாழ்த்து
![](https://eluthu.com/images/loading.gif)
‘ நுணுக்கத்தின் தொகுப்பாகி நீண்டவுடல் பெற்று
நினைவுகளின் விலங்காகி மனிதரென வந்தோம் ! ‘
எனக்கூறும் ஓரடியில் என்னிதயம் ஈர்த்த
எழுத்தான வாளறிவே ! எழிலான பூவே !
கனுவில்லா கரும்பாக கவிதையினை யாத்து
களித்திட்ட விளைநிலமே கதிர்ப்பாயச்சும் சுடரே !
உனக்குற்ற நெஞ்சத்தின் வெடிப்புதனில் யானும்
உட்புகுந்து பா புனைந்து போற்றிபுகழ் கின்றேன் !