அவன் பாதை செல்வோம்
![](https://eluthu.com/images/loading.gif)
கச்சிநகர் தோன்றிபுகழ் கொண்ட யிளம் பரிதி !
கணித்தமிழை கண்மணியாய் காத்தபெரு வழுதி !
மெச்சிடவே மனம் படைத்து மிளிர்ந்த நம் அண்ணல் !
மேதினியை வயப்படுத்தும் வாய்மொழியோ கன்னல்
உச்சநிலைப் புகழுடையான் உடன்பிறப்பாய் வாழ்ந்தோன் !
உன்மைநிலைப் பற்றியதால் உள்ளமதில் சூழ்ந்தோன் !
எச்சவுரை நவின்றதனால் எண்ணலரும் மாற
ஏந்தலவன் செய்திட்டான் மாந்தரெலாம் சேர !
எள்ளுரையை நல்லுரைபோல் ஏற்றதனால் அண்ணன்
எள்ளுனரின் உள்ளமதில் குடிபுகுந்த மன்னன் !
கள்ளுரையால் புரானமத கீழ்மைகளைச் சாடி
கட்டுரையால் போக்கிட்டான் மடமையினைத் தேடி !
ஒள்ளுருவான் பேரறிஞன் ஓர்ந்தவழிச் சென்றான் !
ஒக்கடித்தான் சமுதாயக் களர் நிலத்தை நன்றாய் !
துள்ளு தமிழ் அருவியென துவளாத நடையோன் !
துலங்கிட்டான் திங்களென தூமணிபோல் ஒளியோன் !
கண்ணியங் கட்டுக் கடமை காத்திட்ட நல்லோன் !
கலைஞரரெனும் நன்முகத்தை ஈந்திட்ட வல்லோன் !
தன்னரறும் பூஞ்சோலையென தமிழ கத்தைக் காண
தனையளித்தே உழுதிட்டான் தமிழ்மொழியின் வாணன் !
பண்ணறிய சாதனையின் பேரொளியும் கூட்ட ,
படைத்திட்டான் பல்லவர்கோன் வருமை நிலையோட !
அண்ணனவன் அன்புடையோன் பண்புடையோன் நெஞ்சில்
ஆண்டிடுவான் எக்காலும் அவன் பாதை செல்வோம் !