நாளைநமதே

தென்றலும் நாளை
புயலாய் மாறும்!
தீன்சுனை பின்னர்
நதியாய் ஓடும்!
மொட்டுக்கள் மலர்ந்து
மாலையாய் மணக்கும்!
சிட்டுக் குஞ்சுகள்
சிறகை விரிக்கும்!
வெற்றி முரசும் கொட்டி
வீற்றிடும் அரியணை!
கொட்டும் முரசொலியால்
குவலயம் விழிக்கும்!
எட்டுத் திசையெங்கும்
எதிரிகள் வீழ்ந்திட
களங்கள் வென்று
பரணி பாடிடும்!
இலைஞர் பட்டாளம்!
எழுச்சிப் பட்டாளம்!
விலைமதிப் பற்ற
கொள்கைப் பட்டாலம்!