தெருவில் இறங்கி நீ நடந்தால்

உன்னைப்பற்றிக்
கேள்விப்பட்டால்
எனக்கு
செவி வழிச்செய்தியும்
கவி வழிச்செய்தியே

====================

உன்னுடைய
காதுமடலில்
பார்த்ததில்
இருந்து
ரோஜா மடலுக்கும்
ஜிமிக்கி அணிய
ஆசையாம்

====================

தெருவில் இறங்கி
நீ
நடந்தால்
அடிக்கிற வெயிலும்
அணைக்கிற
வெயிலாகும்

====================

நடத்துனர்
கொடுத்த
பயணச்சீட்டும்
சில்லறையும்
வாங்கி
என்னிடம் கொடுத்து
" பாஸ் பண்ணுங்க "
என்று நீ
சொன்னதற்கு
நான் செய்த
" பாஸ் " தான்
நூற்றுக்கு நூறு
வாங்கிய
எனது
முதல் பாஸ்

====================

சாக்லேட்
எவ்ளோ பிடிக்கும்
என்று கேட்கப்பட்ட
குழந்தையாகி
விடுகிறேன் நான்
என்னை எவ்ளோ
பிடிக்கும்
என்று நீ
என்னிடம்
கேட்கும் போதெல்லாம்

====================

விசிறி எனும்
வார்த்தை
கண்மூடித்தனமாக
ஒருவரை
ரசிப்பதைக்
குறிக்குமென்றால்
நான்
உன்னுடைய
விசிறி அல்ல
ஏசி

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ் (29-Jun-15, 8:12 pm)
பார்வை : 654

மேலே