என் மனம் கவர்ந்தவளுக்கு அமுதென்று பெயர் - 12318

சரிகின்ற கதிரொளி
தருகின்ற கவிமொழி
தெளிகின்ற மனவழி
தெரிகின்ற காதலி......!!
இனிக்கின்ற அவளுரு
இதயத்தில் தென்றலே
இனியென்ன இயம்ப
இது எந்தன் காதல் நிலை ...!!
விழிதிறந்தால் ஒளி அவள் - நல்ல
கவி பிறந்தால் கரு அவள்
மொழி மலர்ந்தால் சொல் அவள் - நல்ல
வழி காட்டும் தமிழ் அவள்.....!!