அரச மரம்
கொட்டாங்கச்சி
மர சொப்பு சாமான்கள்
அரச மரத்து இலை
எல்லாம் எடுத்து வைத்து
சின்ன செங்கல் மூன்று வைத்து
கூட்டாஞ்சோறு தயார்
செய்து..
டேய்..சீக்கிரம் வந்து சாப்பிடு
என்று என்னை..
விளையாட்டுக் கணவனை..
வேகமாய் அழைத்து
மனைவியாய் விளையாடியவள்..
முன் நரை கீற்றுடன்
நாணத்தோடு முன்னே செல்ல ..
நினைவுகள் பின்னே செல்கின்றன..
அப்படியே இருந்திருக்கலாமோ..?
அந்தக் குழந்தைகளின்
சந்தோஷக் கூச்சல்
தொலைந்து போயிருந்தாலும்
அரச மரமாவது ..
இருந்த இடத்தில் ..
அப்படியே..இருப்பதே
ஆறுதலாக இருக்கிறது!