மதங்கள் சுமைகள்
கடவுள் என்ற ஒரு செடியாம்
அதில் பூத்த பூக்களே பல மதமாம்.!
அறியாமையிலே அதை பறித்து
மாலையாக சூடிக்கொண்டானே.!
தன் மாலையே உயர்ந்ததென
கர்வம் கொண்டானே.!
கடைசிவரை கல்லறைக்கும்
சுமந்து சென்றானே.!
கல்லறைக்குள் மயங்கும்போதே
கண்டுக்கொண்டானே.!
மாலைகளே மயக்கம் தரும்
மாயை என்றானே.!
மாயையிலே மாட்டிக்கொண்டு
மூச்சைவிட்டானே.!
****************************************************************************************
மதம் என்ற மாலைகள்
நம் மார்புக்கு சுமைகள்...