கூண்டை விட்டு
கூண்டுக்குள் அடைபட்டேன்!
கூவித் திரிய மறந்தேன்
பயந்தே பறக்கிறேன்!
மரணித்துப் போன
எம் இனம்
எங்கேனும் தென்படுமோ...?
தேடியே தவிக்கிறேன்
சொந்தங்கள் இன்றி
சந்தங்களில்லை
பந்தங்களின்ற
பாசங்களில்லை!
மறந்தே போயின இயல்புகள்
மரபுகள் மீறியே
பொழுதுகள் புலர்ந்திடும்
இயந்திர உலகில்
இந்த பறவைகள் இனம்
காணுமோ உம் சந்ததி...?