நீரை தேடி

முத்துக்களை தேடினேன்...
நீர்த்துளி எனும்
முத்துக்களை தேடினேன்...
நாலாபுறமும் தேடினேன்...
நா வறண்டது தான் மிச்சம்!

தண்ணீர் இல்லாமல்
இறந்தேன் என்று யாரும்
பஞ்ச பூதத்தை
பழிக்க கூடாது
என்றெண்ணி!
ஓடினேன்

தூரத்தில் நீர்
தட்டுப்பட்டது
துரத்தினேன் நீரை
நீர் என்னைப் பார்த்து
பயந்து ஓடியது!
விடவே இல்லை
நானும் துரத்தினேன் அதை...
கடைசியில் நீர் எங்கே
ஒளிந்தது என்றே தெரியவில்லை...

புத்தி மட்டும் திட்டிக்கொண்டே
இருந்தது
ஏ முட்டாளே!
கானல் நீரை
நீர் என்று துரத்துகிறாயே!
உனக்கு மூளையில் ஏதாவது இருக்கிறதா?

என் வயிற்றின்
பசியை மனது
அறிந்திருக்கும்
புத்தி அறிந்திருக்க வாய்ப்பில்லையே!
என்று நினைத்து நகைத்தேன்....

அப்பொழுதும்
கண்களில் இருந்து கூட
கண்ணீர்(கண்நீர்)
வரவே இல்லை....)

ஓட்டத்தின்
இறுதியில்
கண்டுவிட்டேன்
கண் புலப்படும் வரை நீரை...
ஒரு கணமும் தாமதிக்காமல்
குதித்து விட்டேன் நீரில்...

வயிறு முட்ட குடித்துவிட்டேன்
நீரை............
இனி என்னையும் நீரையும்
பிரிக்க முடியாது!.....

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (1-Jul-15, 11:51 am)
Tanglish : neerai thedi
பார்வை : 159

மேலே