தொலைந்த கதை
என்னதான் ஆச்சுனு தெரியல மாசம் முழுக்க ஊர் சுத்துனாலும் செலவாகாத பணம் ,15நாள்ல காலி ஆனது எப்டினு ஒரே குழப்பம்.சேர் ஆட்டோ விலை உயர்வு காரணமா?இரண்டு தடவ படத்துக்கு போனது காரணமா?நல்ல ஹோட்டல்ல நாலு நாள் சாப்ட்டது காரணமா?சிந்தனையில் ஆழ்ந்தும் காரணம் பிடிபடவில்லை .சிக்கனம் தேவைடா சுஜித்னு நெனச்சுக்குட்டேன்.பர்ஸில் 600 ரூபாயுடனும் மனசில் பல 100 சந்தேகங்களுடனும் இருந்தேன்.வழக்கம் போல யோகா வகுப்பு முடித்துவிட்டு உடைமாற்றிவிட்டு ,பேகில் இருக்கும் பர்ஸை எடுத்து பார்த்தால் வெறும் நூறு ரூபாய்தான் இருக்கு ,என் நண்பன் பர்ஸிலும் 500ரூபாய் காணவில்லை விசாரித்தால் நிறைய பேருடைய பணம் இதேபோல் காணவில்லை..இப்பொழுதுதான் இந்த மடையனுக்கு 3000 ரூபாய் மர்மம் விளங்கியது...சுதாரிக்காமலிருந்த என்மேலும்,என் பெற்றோரின் வியர்வையைக் குடித்த அந்த திருடன்மீதும் கோபம் பொங்கியது.ஓடாத அந்த சிசிடிவி கேமராவும்,கம்ப்ளைன்ட்டுக்காக எடுக்கப்படும் சம்பிரதாய நடவடிக்கைகள் மீதும் நம்பிக்கையில்லை.என்னை புலம்பவைத்த இந்த சம்பவத்திற்கு முற்றுப்பள்ளி வைக்க முடிவெடுத்து அடுத்த நாள் காலை வகுப்பு செல்லாமல் பாத்ரூமில் மனறந்து கொண்டு திருடனை பிடிக்க காத்திருந்தேன்.திடீரென ஒருவன் நுழைந்தான் ,என் இதயம் படபடத்தது ,மனதிற்குள் சிங்கம் சூர்யா,விஜயகாந்த் அனைவரும் வந்து சென்றனர்,விரைந்து சென்று திருடனை கையும் களவுமாக பிடித்துவிட்டேன்.இத்தோடு என் ஏமாற்ற கதை முடியவில்லை....ஏனென்றால் திருடன் பிடிபட்டது கதையில் மட்டுமே ,நிஜத்தில் பிடிபட்டது இந்த விலையுயர்ந்த {3000ரூ}பதிவு மட்டும்தான் .இந்த சின்ன ஸ்பீட் பிரேக்கரை தாண்டி என் வாழ்க்கை வண்டி வழக்ம்போல் ஓட தொடங்கும் விழிப்புவணர்வு ஹெட்லைட்டுடன்.