தொலைச்சிடுவேன்,தொலைச்சி
தொலைச்சிடுவேன்..,தொலைச்சி..!!
" இன்னிக்காவது இந்த பென்சிலை., பத்திரமா வீட்டுக்கு எடுத்துட்டு வா.." இது நான் தினமும் என் பையனுக்கு
புது Pencil குடுத்து சொல்ற டயலாக்..
அவனும் " சரி "-ன்னு சொல்லுவான். ஆனா - Evening அவன் Bag-ஐ பார்த்தா.Box எப்பவும் போல காலியாதான் இருக்கும். ( நல்லவேளை Box-ஐ பத்திரமா கொண்டு
வந்தானேன்னு சந்தோஷப்பட்டுக்குவேன்.. )
இன்னிக்கு School-க்கு கிளம்பும் முன்...
" அப்பா Pencil...!! "
" நேத்து குடுத்தது எங்கே..? "
" மிஸ் ஆயிடுச்சு.. "
" நானும் Pencil-ஐ பத்திரமா வெச்சுக்கோன்னு 5 வருஷமா சொல்றேனே.. ஒரு நாளாவதுசொன்ன பேச்சை கேட்டு இருக்கியா..? "
( என் Wife Entry.. ) " அவன்கிட்ட எப்படி சொல்லணும்னு
உங்களுக்கு தெரியல..!! "
" அப்படியா..? எப்படி சொல்லணும்..? "
( என் மனைவி., என் மகனை பார்த்து..) " டேய் கண்ணா.. இன்னிக்கு நீ Pencil-ஐ, தொலைச்சிட்டு வரணும்.. என்ன ஓ.கேவா..? "
அவனும் சிரிச்சிட்டு ' OK-மா'-ன்னு " சொல்லிட்டு கிளம்பிட்டான்.
( நான் என் மனைவியிடம்..) " இப்படி சொன்னா.. அவன் Pencil-ஐ பத்திரமா கொண்டு வந்துடுவானா..? "
" அவன் எப்படி சொன்னாலும் பத்திரமாகொண்டு வர மாட்டான்.. Atleast நம்ம பேச்சை கேட்டு நடந்துக்கறான்னு சந்தோஷப்பட்டுக்கலாம்ல..!! "
அடப்பாவிகளா..?!! கடைசில நான் தான் அவுட்டா..?!!
நன்றி ;Jokes Bank
(தமிழ் நகைச்சுவை துணுக்கு வங்கி)