சிலையின் சில்லுகள் - தேன்மொழியன்

சிலையின் சில்லுகள் ..
~~~~~~~~~~~~~~~~~

சோகத்தின் மீதங்கள்
வாதத்தின் மோதலாய்
பன்முகம் படைத்த
பறவையைக் கொல்கிறது...

​காரிருளை மிரட்டிய
கரு விழி மஞ்சத்தில்
உறவைப் பறிக்கும்
பொய் மொழி நெஞ்சங்கள் ....

வேகத்தை முடக்கிய
தாகத்தின் பாதத்தில்
கோபத்தின் பாகமாய்
ரத்தத்தின் முத்தங்கள் ...

கனவைக் கருக்கிய
நாணய பிழைகளில்
கருவை உடைக்கும்
மரணத்தின் சிலைகள் ...

- தேன்மொழியன்

எழுதியவர் : தேன்மொழியன் (இராஜ்குமார் Y (2-Jul-15, 6:28 am)
பார்வை : 172

மேலே