வரம் தருவாயா ?
இன்று உன் கண்ணில் கசியும் ஈரம்
அன்று உன் நெஞ்சில் இருந்திருந்தால்
உன் கண்ணீரும் , என் கல்லறையும் கை கோர்த்திருக்குமா ?
கருவறையில் இருக்கும் கடவுளிடம் கேட்க வேண்டிய
வரம் கேட்கிறேன் உன்னிடம் ..
காதலனாய் தான் ஏற்றுக்கொள்ளவில்லை
உன் கருவில் ஒரு மழலையாய் பிறந்து மடி தவழும் வரம் தருவாயா ?