என்னை அழிக்காதே !
ஏ பெண்ணே !
உன் நெஞ்சில் இடம் கேட்டேன்
இந்த பிஞ்சு மனசில் நஞ்சை ஊட்டினாய் ,
உன்னை ஏற்றுக்கொண்ட என் மனம் - நீ
அளித்த சன்மானத்தை மட்டும் ஏற்க மறுக்குமா என்ன ?
நீ அளித்த நஞ்சைக் கொண்டு என்னுள் இருந்த தீயவைகளை அழித்து,மாறாக தரும் தூய அன்பினை கூட ஏற்க மறுக்கும் உன் மனம்.
என்னை அழிக்க நினைக்கும் உன்னை அணைக்க நினைப்பதும், உன் நினைவை அழிக்க முயன்றால் நான் என்னையே வெறுப்பதும் வாடிக்கையாகி போனது ...
ஹும் !
இது புரியாத உனக்கு அதுவும் வேடிக்கையாகி போனது..