வேறென்ன வேண்டும்

வேறென்ன வேண்டும்
உனது வெட்க்கத்தில் கடிபடும்
அந்த கைவிரலாய்
உனது முகத்தை தினம் தாங்கும்
அந்த கண்ணாடியாய்
உனது வியர்வைத் துடைக்கும்
அந்த கைக்குட்டையாய்
உனது தலை ஏந்தும்
அந்த தலையனையாய்
உனது கூந்தல் தீண்டும்
அந்த ஒரு மலராக
உனது பாதச்சுவடுகளை தாங்கும்
மண் தரையாக
உனது மேனி துயில் காணும்
உன் படுக்கையாக
இருந்தால் போதுமடி
வேறென்ன வேண்டும்