சக மனிதம் தேடி

அறுந்த என் செருப்பை
அப்படியே காலிலிருந்து உதறாமல்
கைகளில் எடுத்துக் கொடுத்தேன்
என்னை ஒரு நிமிடம் உற்றுப் பாா்த்த தொழிலாளி
இரு கை நீட்டி எடுத்துக் கொண்டாா்...
கூலி கொடுக்கையில் மன்னிப்பும் சொன்ன போது,
சிாித்துக்கொண்டே
கூலியை மட்டும் ஏற்றுக் கொண்டார்
அவா் மீதான முந்தைய அலட்சிய மனிதா்களை
எங்ஙனம் கொண்டு வருவேன்
இங்கே நான்..?

எழுதியவர் : பட்டினத்தாா் (4-Jul-15, 4:22 pm)
Tanglish : saga manitham thedi
பார்வை : 182

மேலே