கிழிந்த தேதிகளில் கிழியாத பக்கங்கள்

நட்சத்திரங்களை கணக்கெடுக்கும் குழந்தையாய்..,
இரவில்..
எண்ணிக்கொண்டிருந்தேன்...

என் நாட்காட்டியின் கிழிந்த தேதிகளில்,
கிழியாமல் இருக்கும் பக்கங்களை...

அவற்றில், பெரும்பான்மை விடுமுறை தேதிகள்..,
வாரதேதிகள் அதிகம் காணாமல் போயிருந்தன...

அன்னையர் தினமும், ஆசிரியர் தினமும் அடுத்தடுத்து தொடர்ந்து காணப்பட்டன...
திருவிழா தேதிகள் மட்டும் வண்ணம் மாறாமல் இருந்தன...

ஆம் உண்மையில் அவை நட்சத்திரங்கள் தான்..,
வெகுதூரத்தில் தினம் மின்னுகின்றன...

எழுதியவர் : சாய நதி (4-Jul-15, 11:29 pm)
பார்வை : 87

மேலே