புத்தகம் அது பொக்கிஷம்

அச்சகத்தில் புத்தகம்
அனைத்தும் அதற்குள்
பொத்தி வைக்கும் பொக்கிஷம்
பொக்கிஷமோ புதையலோ
காண்பது எல்லாம் காவியமோ கதைகளோ
கற்பனையில் மிதந்து செல்லும்
கவிதை என்னும் ஊற்றோ
அடக்கும் இந்த பொக்கிஷம்

காலத்தினால் அழியாத கடந்து வந்த
சரித்திரமோ சாதனையோ சத்தியமோ இலட்சியமோ
புத்தகத்துள் பொதிந்து இருக்கும்
பூர்வீக இரகசியங்கள் புதுமைகளும் புதினங்களும்
கொண்டிருக்கும் புத்தகம் பொக்கிஷமே
அறிவுக் கடலில் அழகுத் தமிழ் நீந்துகின்ற
புத்தகத்தில் காண்பதெல்லாம் பொக்கிஷமே

நாம் இன்பமுடன் படித்திட இனிக்கும் இன்ப
காவியமே கதைகளே சரித்திரமே சான்றுகளே
எழுத்துகளால் ஏற்றம் தரும் அமைதி தரும்
புதுமை மிக்க பொக்கிஷம் தான் புத்தகமே
புத்தகத்தில் உலவி வரும் ஊட்டமுள்ள சங்கதிகள்
உணர்த்தும் அன்பு சிந்தனைகள் அத்தனையும்
தன்னுள்ளே பதுக்கி வைக்கும் பொக்கிஷமே புத்தகமாம்

எழுதியவர் : பாத்திமா மலர் (4-Jul-15, 11:35 pm)
பார்வை : 195

மேலே