குடி ஒழிப்பீர் குடும்பம் காப்பீர்
மது அருந்தி, மதி மயங்கி,
சமூகத்தில் இழிவெய்தி,
உற்றாரும் மற்றோரும் தூற்ற
வாழ்ந்தால் என்ன? மடிந்தால் என்ன?
குடல் கெட்டு, ஈரல் கெட்டு
பெற்றவர்க்கும் வேதனையாய்;
மனையாளுக்கும் பேரிடியாய்
மரிப்பதிலே என்ன பயன்!!
குடி ஒழிப்பீர்! குடும்பம் காப்பீர்!!
வீட்டிற்கும் நாட்டிற்கும் பாடுபட்டு
மானம் காப்பீர் ! பிள்ளைகளை
பெண்டுகளை வாழ வைப்பீர்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
