ஏமாற்றம்

பட்ட படிப்பு முதல்
முனைவர் பட்டம் வரை
முதல் வகுப்பிலேயே முத்திரை பதித்து
பாராட்டு பெற்ற நான்
ஆயிரமாயிரம் கோடியில்
பட்டதாரிகளுக்கு அரசு வேலை என
அறிவித்த அரசின் விளம்பரத்தை பார்த்து
பெற்றோரின் வருமானத்தை எல்லாம்
வேலை தேடி விண்ணப்பம் அனுப்பியே
வீணடித்த எனக்கு
கடிதம் வந்தது
ஆவலாய் ,ஆசையாய் !!!
பிரித்தேன் ,படித்தேன் !!!
விரும்பும் தகுதி முன் அனுபவம்
என்றிருந்தது ...

எழுதியவர் : வினோத்குமார்..சீராளன் (5-Jul-15, 6:17 pm)
Tanglish : yematram
பார்வை : 128

மேலே