காதல்
நான் படித்த
இலக்கியம் எங்கும் காதல்
பார்த்த
சினிமாக்களில் காதல்
ரசித்த
நாடகங்களில் காதல்
வாசித்த
நூல்களில் எல்லாம் காதல்
கேட்ட
பாடல்களிலும் காதல்
சுவரில்
ஓவியம் சித்தரித்தது காதல்
கற்ற
வரலாறுகள் முழுக்க காதல்
கல்லூரி
பாடப் புத்தகத்திலும் காதல்
பயணித்த
ரயிலினுள்ளே காதல்
கடற்கரையில் காதல்
பூங்காவில் காதல்
கல்லூரியில் காதல்
ஆபீசில் காதல்
எங்கும் காதல்
எதிலும் காதல்
என் வாழ்வில் மட்டும்
இல்லை காதல்