ஜின்னா என்பவர் யாரென

ஜின்னா என்பவர் யாரென ?-- கிருபா
**************************************************
சமூக அவலங்களை
சந்தியில் பந்தலிட்டு
எழுத்தால் சிந்திக்க வைத்தவர் !
காலத்தின் கோலங்களை
கணினியில் பட்டியலிட்டு
கலக்கலாய் கவி மாலை கோர்த்தவர் !
எழுத்துக்களின் வடிவமைப்பில்
இறுமாப்பு இல்லாது
இமயத்தை தொட்டவர் !
தேடல்களில் தொலைந்தாலும்
தொலைநோக்கு பார்வையோடு
தேடல்களை தொடர்பவர் !
கலவரங்களால் காயப்பட்டதால்
காகிதத்தில்
கவி மருந்து இலவசமாய் படைக்க துடிப்பவர் !
கவிதைகளில்
மனிதர்களை பிரதிபலிக்கின்றீர் !
உம் கவிதைகள்
உம் சிந்தனைகளை பிரதிபலிக்கின்றன !
எழுத்துக்களை
காதலித்து
கவிதையை திருமணம் புரிந்து
எழுத்து தளத்தில்
கவியாரசராய்
எழுத்து தள நண்பர்களின்
அகத்தை ஆளுகின்றீர் !
கவி வளத்தில் உம் கவி
ஆழ் கிணறின் ஊற்று !
கவி கோர்ப்ப்பில்
உமக்கு ஈடு இணை நீர் தான் !
பரிசு எனக்கு
பெரிசல்ல!
பணிவு தான்
எனக்கு பெரிசு என
பணிவை முன் வைத்தவர் !
சிந்தனை கவியே !
சிறப்பான எழுத்துக்களால்
மேலும் மேலும் சிறக்க
சிறப்பான வாழ்த்துக்கள் !
வாழ்க வளமுடன் !
-----------------கிருபா கணேஷ் ----------------------------