பல வழிகள் செலவழிக்க

அனைவருமே..
மெலிதான பர்சோடு
வெளியில் போவது நல்லது..
வங்கி அட்டை இரண்டு வைத்து
அதிக மிச்சம் உள்ளதை
வீட்டில் வைத்து
அதிக பட்சம் ஐந்தாயிரம்
மிச்சம் உள்ள அட்டை கைவசம்
வைத்து கொள்வது மிக நல்லது..

காதலர்கள்..
தங்களின் இணையுடன்
கடற்கரை..உணவகம்..என
செல்கையில்
வங்கி அட்டை கையினில்
இல்லாமலிருப்பது மிக நன்று..

குடும்பஸ்தர்கள் ..
மனைவியின் கணக்கில்
பணத்தை போட்டு வைப்பது
சாலவும் நன்று..
கடைவீதிக்கு உடன்
அழைத்து செல்கையில்
தம் கணக்கிற்கு மாற்றிக் கொண்டு
தேவைக்கு பணத்தை எடுத்து செல்வது
என்றைக்கும் நன்று..

இப்படியெல்லாம்
யாருமே சொல்லிக் கொடுக்காத
தோஷம்தான்..
கவச குண்டலங்களையும் கழற்றி தரும்
கர்ண மகராசனாய்
வாழ்ந்து கொண்டிருக்க
வேண்டியுள்ளது!

யாருக்கேனும் புரிந்தால் சரி!

எழுதியவர் : கருணா (8-Jul-15, 11:15 am)
பார்வை : 740

மேலே