மாற்றமல்ல ஏமாற்றமே

விடியற்காலை முதற்குயிலின்
ஆனந்த கச்சேரியில் கஷ்டமெல்லாம்
கரைந்தெலுந்தொம் பரிதி முன் பனியை போல!!!!!

செய்தித்தாளை விட்டெரியும் சைக்கிள் பையனின்
அலட்சியத்துடன் விடிகிறது
இந்த தலைமுறை விடியற்காலை!!!!!!

தென்னங்கீற்றின் ஓட்டை வழி உறங்கும் எனை
துயில் எழுப்ப ஆயிரம் சூரியன்கள் போட்டியிட்டன.

பேயை போல அலறுகிறது இன்றைய காற்றுபுக
குளிரரையின் தலையணை அலைபேசி...............

பொட்டல் புழுதியில் விளையாடி கானல் நீரில் குதித்தாடி
செந்நெல் சோற்றை தின்றே உயிர் வளர்த்தான்
தொண்ணுறு வருடம்......

ஒற்றை மேசையில் விளையாட மினரல் வாட்டர் நம்மை வசை பாட
ஜாமும் ப்ரெடும் நம் உடலை தின்றது போக
மிச்சம் வைத்தோ அளவில்லா சர்க்கரைதான்!!!!!!!!!!!!!

செவி தொட்டு இதயம் சேரும் மைனாவின்
கீதங்களை கேட்ட போதே மனம் கவி பாடும்......
இப்போது செவிடனாய் அலையும்
சிலர் காதுக்குள் மட்டும் இசை பாடும்.....

கொளுத்தும் வெயிலிலும் கொஞ்சும் வேப்பங்காற்றை
குளிரரையை விட்டு வெளியில் வந்து உணருங்கள்.....

அப்போது புரியும் இயற்கையின் அருமை............

மாற்றம் மாற்றம் என நம் கண்டதெல்லாம் மாற்றமல்ல ஏமாற்றமே!!!!!!!!!!!!!

எழுதியவர் : வெண்ணிலாராஜ் (9-Jul-15, 1:31 pm)
பார்வை : 79

மேலே