உன்னோடு இருக்கையில்

நான் உன்னோடு இருக்கையில்
எப்படி இருப்பேன்..........
கலையாத தலையை
சரிசெய்து கொண்டு இருப்பேன் ........
வெட்கங்களை புன்னகையால்
மறைத்து கொண்டு இருப்பேன் .....
தெரிந்தும் தெரியாமலும்
உன் விரல் நுனி
என் மீது படுவதை
இரசித்துக்கொண்டு இருப்பேன் ....,,
சுத்தம் சுத்தம் என்பவள்
உன் எச்சில் பொருளுக்காக
ஏங்கி கொண்டு இருப்பேன்.......
உன் சட்டையில்
ஒட்டாத தூசியை
துடைத்து கொண்டு இருப்பேன் .....
கைக்குட்டைக்கும் கைகளுக்கும்
இடையே ஒரு
கலவரத்தையே
நடத்தி கொண்டு இருப்பேன் ......
நான் இப்படித்தான்
இருப்பேன் உன்னுடன் இருக்கையில்