தன்நம்பிக்கை

தோழனே !
துன்பம் வரும் வேளையில்
துவண்டு விடாதே
தோல்வியைக் கண்டு
தொலைத்து விடாதே வாழ்வுதனை........

கண்கலங்கும் நேரமதை
கணிசமாய் குறைத்து விட்டு
கண்திறந்து பார்த்து விடு
ஒருமுறை இவ்வுலகமதை.........

சோகமதை மனம் சுமந்தால்
சோதனைகள் தேடி வரும்
வேதனைகள் குறைத்து விட்டால்
வேகமது வாழ்வில் வரும்......

மனம் கலங்கும் வேளையிலே
மாற்றங்களை நினைத்து விடு
மறுபடியும் வாழ்வு சிறக்கும்
மகிழ்வினிலே .........

மனதில் நம்பிக்கையோடு
மறுபடியும் முயற்சி செய்
மாற்றங்கள் பலவாகி -உன்
மடியில் விழும் வெற்றிக்கனி

எழுதியவர் : வேலணையூர் சசிவா (11-Jul-15, 4:31 am)
சேர்த்தது : வேலணையூர் சசிவா
பார்வை : 703

மேலே