அரசியல் சினிமா
உலக நாடுகள் அனைத்தும்
அரசியலை அங்கமாக வைத்துக்கொண்டு சினிமாவை பொழுது போக்காக வைத்துள்ளன
ஆனால் நாம் மட்டும் தான்
சினிமாவை அங்கமாக வைத்துக்கொண்டு அரசியலை பொழுது போக்காக வைத்துள்ளோம்
எங்கு பார்த்தாலும் சினிமா
உலகம் ஒரு நாடக மேடை என்பதை நிரூபித்து விட்டோம்
சினிமாவில் நடித்து நடித்து பழகி அரசியலையும் நாடக மேடையாக்கி அதிலும் நடித்து மட்டுமே வருகின்றன
இதை எதிர்த்து கேட்டால் அவன் கதி "களி" தான்.
தகுதி இல்லாமல் பட்டம் பெறாமல் பணத்தின் மூலம் அரசியலுக்கு வந்து படித்தவர்களையும் பட்டம் பெற்றவர்களையும் ஆட்டிப்படைக்கின்றனர்
மக்களின் விழிப்புணர்வு தான் அனைவரும் அறிந்ததே
நமக்காக தரப்பட்ட கடமையே வாக்களிப்பது ஒன்றுதான் அதையும் 500,1000 என விற்றுவிடுகிறோம்
மக்களுக்காக அமைக்கப்பட்டதே
சட்டம் என்பதை மறந்து அடிமை போலவே வாழ்ந்து வருகிறோம்
இதை தடு்க்க இளைஞர் சமுதாயம் மட்டுமே பாடுபட வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்
இதை சாதாரண செய்தி என்று விட்டு விடாதீர்கள் வரும் சமுதாயமாவது நலமுடன் வாழட்டும்
தயவு செய்து பகிருங்கள்
இப்படிக்கு சமுதாய நல அக்கறை உள்ள தமிழ் மாணவன்
தினேஷ்குமார்