நாடகம்

நாடகத்தைத் தொடங்கிவைக்க
திரை விலக்க தயாராக வானம்...

இன்றைய தினத்தில்
நடிப்பதற்காக
நாமெல்லாம்
வேடங்கள் பூண்டு
விடியலில் எழுகின்றோம்...

அரிதாரங்கள் தேவையில்லை...
அவரவர் தோற்றங்களே
அவரவர்களுக்கான வேடங்கள்...

எல்லோரும் நல்லவர்கள் எனும்
வேடங்களையே பூணுகின்றனர்...
நாள் முழுவதும்
நன்றாகவே நடிக்கின்றனர்...
நானும் சகமனிதர்களோடு
நடிக்கின்றேன் சாமர்த்தியமாய்...

இரவு நெருங்கும் வேளை...
திரைமூடக்காத்திருக்கும் வானம்...
இமைகள் மூடிய வேளை மட்டுமே
இங்கு எதார்த்த மனிதர்கள்...

எழுதியவர் : நித்திலம் ரமேஷ் (11-Jul-15, 10:01 am)
Tanglish : naadakam
பார்வை : 59

மேலே