மருந்தே கடவுள்

மருந்துகள் இன்று
மனிதனின் 'கடவுளாக' மாறிவிட்டன!
மாத்திரைகள் அவனது
விழித்திரையின்
'காலை' மற்றும் 'இரவு' காட்சிகளாகிவிட்டன ............

நினைவு வருவதற்கு ஒன்று
நினைத்ததை மறப்பதற்கு ஒன்று
என்று -உடலின்
ஒவ்வொரு இயக்கமும் மாத்திரைதான்,
அறிவியலாக சொன்னால்
மருந்தாற்றல் மனிதனின் 'இயக்க ஆற்றல்' ............

சக்கரை, இரத்த அழுத்தம் இற்று
சாமானிய மனிதனை கூட விட்டுவைக்கவில்லை!
காரணம்
மனிதனின் உடல் கட்டமைப்பு
இயற்கையானது ஆனால்
இன்று இயந்திர பாகம் ஆனது .............

மனிதனே
உன் ஐம்புலன்களையும் கட்டுபடுத்தி பார்,
இனிமையாக பேசி பார்
சர்க்கரை உனக்குள் உரையாது,
மனதை மறைக்காதே
அதன் 'அழுத்தம்' அடங்கிவிடும்......

எதார்த்தமாக வாழ்ந்து பார்
எல்லாம் உனக்கு சொந்தமாகும்!
மனிதனாக மட்டுமே இருக்க ஆசைப்படு,
மாத்திரைகள் இல்லா நித்திரை
உனக்கு சொந்தம்..........................................

என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

எழுதியவர் : (11-Jul-15, 1:38 pm)
Tanglish : marunthay kadavul
பார்வை : 66

மேலே